சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.46 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.46 ஆயிரத்து 240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து, ரூ.5 ஆயிரத்து 780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.21 உயர்ந்து, ரூ.6 ஆயிரத்து 305-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, ரூ.1 உயர்ந்து, ரூ.78-க்கும், ஒரு கிலோ ரூ. 78 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.