பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி அதிராம்பட்டினம் தனியார் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் 15.2.2024 மற்றும் 16.2.2024 அன்று நடைபெற்றது.
இந்த போட்டிகள் தஞ்சாவூர் மண்டல அளவில் வெற்றி பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் பூண்டி புஷ்பம் கல்லூரி அணி திருச்சி மண்டல அளவில் வெற்றி பெற்ற பிஷப் கல்லூரி அணி மற்றும் சென் ஜோசப் கல்லூரி ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் லீக் சுற்று முறையில் போட்டிகள் நடைபெற்றது.
இறுதியில், பிஷப் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஜோசப் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தைக் காதிர் முகைதீன் கல்லூரி அணியும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற கல்லூரி அணிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளைய வீரர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.