சென்னை வந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!
Oct 17, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பத்திரமாக மீட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் (Indian Naval Warship INS Chennai), நேற்று (பிப்ரவரி 16) பத்திரமாக சென்னை வந்தடைந்தது.

அரபிக் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், டிரோன்கள் மூலம் தாக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்வி லிலா நார்ஃப்லோக் (MV Lila Norfolk) என்ற சரக்கு கப்பல், ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த விமானம் உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் 5 முதல் 6 ஆயுதம் ஏந்திய நபர்கள் ஏறியதாக கடல் வர்த்தக அமைப்பு தெரிவித்ததை அடுத்து, கப்பலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்திய கடற்படை, ஐஎன்எஸ் சென்னை கப்பலை எம்வி லிலா நார்ஃப்லோக் கப்பலை நோக்கி அனுப்பி வைத்தது.

அதைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்தபடி, கப்பலில் உள்ள மாலுமிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின்தொடர்ந்து சென்ற ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறுமாறு ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதன் பின்னர், போர்க்கப்பலில் இருந்த கடற்படை கமாண்டோக்கள், ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலுக்குள் குதித்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கப்பலில் எங்கு தேடியும் கடற்கொள்ளையர்கள் சிக்கவில்லை. எனவே, இந்திய கடற்படை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை விட்டு தப்பித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே, கப்பலுக்குள் மாட்டித் தவித்த மாலுமிகளை, கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டு, மீண்டும் சரக்கு கப்பல் தனது பயணத்தைத் தொடங்க வேண்டிய உதவிகளை ஐஎன்எஸ் போர்க்கப்பல் அளித்து வந்தது. இந்நிலையில், 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளை மீட்கும் பணியில் களமிறங்கிய ஐஎன்எஸ் போர்க்கப்பல், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில், நேற்று சென்னை துறைமுகம் வந்துள்ளது.

Tags: INS
Share
Tweet
SendShare
Previous Post

கால்பந்து போட்டி – கலக்கிய வீரர்கள்!

Next Post

இங்கிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு : இந்தியா 126 ரன்கள் முன்னிலை!

Related News

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies