வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே - பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!
Aug 26, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 12, 2026, 05:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய திரையிசையில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பால் காலமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.ஜானகி பாடியுள்ளார். தமிழில் இரண்டு, தெலங்கு மற்றும் மலையாளம் என, நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மருத்துவமனையில் எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் காலமானதாக, அவரது பேத்தி தகவல் தெரிவித்தார். எஸ்.ஜானகியின் மறைவால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிப்பதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார். எஸ்.ஜானகியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகியின் ஆத்மா சாந்தி அடையட்டும் என, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜானகியின் பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? என நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இறக்கி வைக்க முடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags: janaki passed away todays. janaki passed away at 88janaki amma passed awayjanaki passes awaylegendary singer s janaki passes aways janaki passed awayjanaki passed aways janaki passes away
Share
Tweet
SendShare
Previous Post

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

Next Post

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies