ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
Aug 26, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மொபைல் டவர்கள் இல்லாத இடங்களில் மக்கள் தொடர்பில் இருக்க உதவும் வகையில், இந்தியாவில் BSNL நிறுவனம் 1.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய சாட்டிலைட் போனை அறிமுகப் படுத்தியுள்ளது.நெட்வொர்க் இணைப்பு இல்லாத பகுதிகளில் பயன்படுத்துவதற்கு வசதியாக இந்த சாட்டிலைட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. BSNL சாட்டிலைட் போனை யாரெல்லாம் பயன்படுத்தலாம்? இந்த போனை எப்படி வாங்கலாம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அவசர காலங்களில் வழக்கமான தொலைத்தொடர்பு இல்லாத நெட்வொர்க் கிடைக்காத காடு மற்றும் மலைப்பகுதிகளில் பயனுள்ளதாக அமையும் வகையில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான BSNL சாட்டிலைட் போனை அறிமுகப் படுத்தியுள்ளது.

வழக்கமான நெட்வொர்க்குகளுக்குப் பதிலாக செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திச் செயல்படும் வகையில் Inmarsat நிறுவனத்துடன் இணைந்து BSNL இந்தப் போனை தயாரித்துள்ளது.

ஐபோன் மற்றும் பிற ஸ்மார்ட் போன்களை விட பல சிறப்பம்சங்களுடன் சார்ஜ் செய்யும் வசதிகள் இல்லாத இடங்களில் நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் நீடித்த பேட்டரி ஆயுளுடன் சவாலான சூழல்களுக்காக விரைவில் பழுதாகத வகையில் உறுதியான வடிவமைப்புடன் இந்த சாட்டிலைட் போன் உருவாக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் கால் வசதி மூலம் டவர் இல்லாத இடத்தில் இருந்து கூட தெளிவாக பேச முடியும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ள இந்த சாட்டிலைட் போன் பேரிடர் காலங்களில் எஸ்ஓஎஸ் எமர்ஜென்சி சப்போர்ட்டை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக பாதுகாப்புத் துறை, கடல்சார் நடவடிக்கைகள், பேரிடர் மீட்புப் பணிகள், சுரங்கத் தொழில் ஆகியவற்றில் பணியாற்றுவோர், டவர் இல்லாத பகுதிகள் வழியாக ஆன்மீக பயணம் செல்பவர்கள் மற்றும் சாகசப் பயணம் செல்பவர்கள் ஆகியோருக்கு இந்த சாட்டிலைட் போன் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு ஐபோன் 17 ப்ரோ விலைக்கு நிகராக BSNL சாட்டிலைட் போனின் விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 166 ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

இந்தியாவில், சாட்டிலைட் போன்களுக்குக் கடுமையாகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் பொதுமக்கள் இந்த சாட்டிலைட் போனை எளிதாக வாங்கி விட முடியாது.

மிக முக்கியமான மற்றும் அவசரத் தேவைகள் கொண்ட பணிகளுக்காக (mission-critical situations) வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புத் தகவல் தொடர்பு சாதனமாக உள்ள இந்த BSNL சாட்டிலைட் போனை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து முதலில் அனுமதியைப் பெறவேண்டும்.

நாடு முழுவதும் தனது தரைவழித் தொலைத்தொடர் terrestrial நெட்வொர்க்கை BSNL தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த சாட்டிலைட் போன் அறிமுகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக நாடு தழுவிய அளவில் தனது சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 99,000, 4G தளங்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக BSNL நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து நாடு முழுவதும் கூடுதல் 4G தளங்களை அமைக்கவும் BSNL-க்கு அனுமதி அளிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப் படுகிறது.

Tags: Central Government-owned BSNLSOS emergency functionsBSNLnew satellite phonenew satellite phone launchedBSNL satellite phone
Share
Tweet
SendShare
Previous Post

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

Next Post

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies