திமுக 2.0 போன்று தவெக ஆட்சி நடைபெறுவதாக, லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
காமராஜர் மணிமண்டபத்தில் மார்டின் குழுமம் மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினரும், லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் செஞ்சி சிறுமி வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் சட்டம் – ஒழுங்கு நிலைக்கு எடுத்துக்காட்டு என்று விமர்சித்தார். தமிழக பெண் உயர் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் நீண்ட காலத்திற்குப் பின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். திமுக 2.0 போன்று தவெக ஆட்சி நடைபெறுவதாகவும், ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.
















