முதலமைச்சரின் கூடா நட்பு கேடாய் முடிந்ததாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினர் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் தீபம் ஏற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சருக்கு என்ன அறிவுரை வழங்கினார்கள் என தெரியவில்லை என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் ஆணவத்தை உச்சநீதிமன்றம் முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், நிச்சயமாக தீபம் ஏற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
















