பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக,
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளதாகவும், அதனால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகம் பாதிக்கப்படுவதாகவும், இதில் தனிப்பட்ட முறையில் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகத்தில் நிர்வாக முடிவுகளை அரசு அமைத்த கன்வீனர் குழு எடுப்பதாகவும்,
இதனால், நிர்வாக மற்றும் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதில் பயன் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சட்டங்கள் மற்றும் யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு முழுநேர துணைவேந்தர்களை நியமிக்க ஏற்பாடு செய்வது அவசியம் என்றும்,இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம் என்றும் ஆளுநர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடல் மற்றும் தேர்வு குழுவில், வேந்தரின் பிரதிநிதி, பல்கலை சிண்டிகேட் பிரதிநிதி, மாநில அரசின் பிரதிநிதி மற்றும் யுஜிசி தலைவரின் பிரதிநிதி இடம்பெறலாம் என்றும்,
உறுப்பினர்கள், கல்வியாளர்களாகவும் நிபுணர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















