திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாததை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாத தமிழக அரசைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பு பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மழையில் நனைந்தபடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















