தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் - முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!
Nov 25, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2026, 07:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், தவெக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். இதற்காக மலைக்குச் செல்லும் பாதையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டுமே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் அதிருப்தியடைந்த பக்தர்கள் மற்றும் மற்றும் இந்து அமைப்பினர் மலை உச்சிக்குச் செல்லும் நுழைவுப் பகுதியில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தவெக அரசையும், காவல்துறையையும் கண்டித்து முழக்கமிட்ட பக்தர்கள், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, சுமார் 700-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் தொடர் பதற்றம் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் முருக பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags: thiruparankundram deepam rowThiruparankundramThiruparankundram issuethiruparankundram temple issueThiruparankundram Deepam issuethiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issue
Share
Tweet
SendShare
Previous Post

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

Related News

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

திருக்கார்த்திகை தீப திருநாள் – சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்!

ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்!

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies