உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்
Nov 25, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2026, 06:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், சிறுபான்மையினரின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தினரின் மொத்த வாக்குகளையும் வாரிச்சுருட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முருக பக்தர்களின் வழிபாட்டு உரிமைகள் தப்பித்தவறிக் கூட மீட்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து, தெரிந்தே மாபெரும் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார் முதல்வர் விஜய்.

ஜோசப் விஜய் எனும் கத்துக்குட்டியின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ‘பலிகடாவாக’ தனது தலையை தெரிந்தே கொடுத்திருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர்!

‘திருப்பரங்குன்ற தீபத்தூணில் இன்று ஒருநாள் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்’ என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், ‘நீதித்துறையுடன் விளையாடாதீர்கள், உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்துங்கள்’ என உயர்நீதிமன்றம் எச்சரித்தும் கூட , நீதித்துறையின் மாண்பை மதிக்காத  ஜோசப் விஜய் அவர்களையும், அவரது இந்துவிரோத அரசையும் சட்டம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை!

ஜோசப் விஜய் எந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து இந்துக்களை புண்படுத்தினாரோ, எந்த அரியணையை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக திரும்பினாரோ, எந்த பதவியை பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றங்களை பகைத்துக் கொண்டாரோ, அந்த பதவியும், ஆட்சியும், அரசும் இனி நெடுநாள் நீடிக்கப் போவதில்லை என்பது தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது!

இதே தவறைத் தான் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவும் செய்தது, தனது ஆட்சியை இழந்தது! தற்போதைய தவெக அரசும் அதே தவறைத் தான் செய்துள்ளது, இதற்கான விளைவுகளையும் கூடிய விரைவில் சந்திக்கப் போகிறது! அதிகார ஆணவத்தில் மிதக்கும் தவெக அரசுக்கு முருகப்பெருமான் தக்க பாடத்தை புகட்டுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: nainar nagendran bjpbjp nainar nagendranThiruparankundram Deepam issuemla nainar nagendranTVK governmentnainar nagendran planNainar Nagendrannainar nagendran liveThiruparankundramthiruparankundram deepam issue caseThiruparankundram issuekarthigai deepam issuethiruparankundram temple issuemadurai deepam issueNainar Nagendran speech
Share
Tweet
SendShare
Previous Post

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

Related News

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீபத் திருவிழா – பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கோத்தகிரியில் பாஜக எம்எல்ஏ போஜராஜன் தடுத்து நிறுத்தம் : அன்னூரில் எல்.முருகனை திருப்பி அனுப்பிய போலீசார்!

திருக்கார்த்திகை தீப திருநாள் – சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்!

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – மதுரை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்!

ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்!

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies