திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை என்று கோயில் ஸ்தானீக பட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில், கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை எனவும், உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்ததாகவும் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மலைமேல் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை எனவும், கோயில் நிர்வாகம் வெளியிட்ட கடிதத்தில், தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது மிகவும் மனவேதனையை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
















