திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் இந்து முன்னணி அமைப்பினர் மனு அளித்தனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விரிவான விளக்கம் கோரி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர், அவ்வாறு நிறைவேற்றப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
















