திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தத் தவறியதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றத்தில் தீப தூணில் தீபம் ஏற்றாததால் அதனை செயல்படுத்த தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி வி.ராமசுப்பு என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
















