சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை தற்போது ‘சபரிமலை ZERO’ என்ற மைல்கல் வெகுவாக கவர்ந்து வருகிறது.
சபரிமலை சன்னிதானத்தில், நடைப்பந்தல் தொடங்கும் பகுதிக்கு அருகே ‘சபரிமலை ZERO’ என்ற மைல்கல் அமைந்துள்ளது. இது வெண்மை மற்றும் நீல நிறங்களில் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இதனால், பம்பையிலிருந்து மலைப்பாதை வழியாக சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள், இந்த மைல்கல்லை கண்டதும் உற்சாகமடைந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
செல்ஃபி, வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஐயப்ப பக்தர்களின் புதிய இன்ஸ்டாகிராம் ஹாட்ஸ்பாட்டாக ‘சபரிமலை ZERO’ மைல்கல் உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த மைல்கல் அங்கு இருந்தாலும், இந்த ஆண்டு வெள்ளை மற்றும் நீல நிறங்களில் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருப்பது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் இந்த மைல்கல்லின் முன்பு புகைப்படம் எடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால், சபரிமலையில் தற்போது புதிய இன்ஸ்டாகிராம் ஹாட்ஸ்பாட்டாக ‘சபரிமலை 0’ மைல்கல் உருவெடுத்துள்ளது. ஐயப்பனைத் தரிசிக்க மலை ஏறி வரும் பக்தர்களுக்கு, ‘சபரிமலைக்கு வந்துவிட்டோம்’ என்ற மகிழ்ச்சியை உணர்த்தும் அழகான அடையாளமாக இந்த மைல்கல் திகழ்கிறது.
















