காசி தமிழ் சங்கமம் 5.0 - சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!
Nov 26, 2026, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசி தமிழ் சங்கமம் 5.0 – சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 26, 2026, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சிக்காக மாணவர்கள் காசிக்குப் பயணிக்கும் சிறப்பு ரயிலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாணவர்கள் காசிக்குப் பயணிக்கும் சிறப்பு ரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் , ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு சிறப்பு ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமோடி, நடப்பாண்டில், காசி மற்றும் திருக்குறள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

திருக்குறள் மற்றும் காசி குறித்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்கள் காசி தமிழ்ச் சங்கமத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார். நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில், 7 சிறப்பு ரயில்கள் மூலம் ஆயிரத்து 500 பேர் பயணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய மாணவர்கள், காசி தமிழ் சங்கமம் குறித்து அறிந்ததும் பயணத்திற்குப் பதிவு செய்ததாகவும், தொடர்ந்து திருக்குறள் மற்றும் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் இடம்பெற்ற வினாடி வினா போட்டியில் பங்கேற்றதாகவும் கூறினர்.

பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தாங்கள் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறிய மாணவர்கள், இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கும் சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags: IIT Madras Director KamakotiGovernor Rajendra Vishwanath ArlekarKashi Tamil Sangamam 5.0Chennai Egmore railway station
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கும் தமிழர்!

அன்பில் மகேஷ் உத்தரவின் அடிப்படையில்தான், தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் – முத்துக்குமார் வாக்குமூலம்

திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 2,300 கோடி வரை இழப்பு – தணிக்கைத் துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புத்தக கொள்முதல் முறைகேடு – ஆவணங்களை ஆய்வு செய்ய முன்னாள் DGP வெங்கடராமன் நியமனம்!

இந்தியா முன்னேறுவதை வல்லரசு நாடுகள் விரும்பவில்லை – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

காசி தமிழ் சங்கமம் 5.0 – சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைப்பு!

திருப்பரங்குன்றம் தீபதூணில் தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு – மதுரையில் கொட்டும் மழையில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தாங்கள் எந்த கருத்தும் கூறவில்லை – திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதா? – தவெக அரசிடம் அறிக்கை கேட்கும் ஆளுநர்!

டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா; தனது பாஸ்போர்டை வழங்க வேண்டுகோள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு; அன்பில் மகேஷை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை

தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – விசாரணை அதிகாரியிடம் கோப்புகள் ஒப்படைப்பு!

திருமலை செல்லும் பக்தர்களுக்கு நிதி பாதுகாப்பு – காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies