கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் குறித்து விசாரிக்க குழு
அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மீதான பாலியல் புகாரை விசாரிக்க வனத்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், மதுமதி ஐஏஎஸ், சட்டத்துறை செயலாளர் சுமதி, சுனிதா ஜோ ஐபிஎஸ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக 60 நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…
இதனிடையே பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்த தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த எம்எல்ஏ அருள் விக்னேஷ், தற்போது தனது வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து, கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
















