புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய முன்னாள் DGP வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நூலகங்களுக்கு ஆயிரத்து 645 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள பல புத்தகங்கள் குப்பைகள் போல் இருப்பதாக நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக நூலகங்களுக்கு புத்தக கொள்முதல் செய்தது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் DGP வெங்கடராமனை நியமித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டியுள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் முதல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், விசாரணைக்கு தனது கருத்துகளை தெரிவிக்குமாறு வெங்கடராமனுக்கும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் அறிவுறுத்தினார்.
















