திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கடந்த 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது.
ஆனால், கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க அரசுத் தரப்பில் யாரேனும் உத்தரவிட்டார்களா? என்பது குறித்து விசாரிக்கவும், தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரிய முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. ((OUT))
















