கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி, டிஜிபியிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி புகார் மனு அளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து உதயநிதி மனு அளித்துள்ளார். அந்த மனுவில், அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர், டிஜிபியை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
















