திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் , 121 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை சென்னை ஜெயின் தம்பதியினர் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த வர்தமான் ஜெயின் – ராதிகா ஜெயின் தம்பதியினர், ஏழுமலையான் மீதான ஆழ்ந்த பக்தி மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பிரம்மாண்ட காணிக்கையை வழங்கியுள்ளனர். தங்க ஆபரணங்களுடன் விலைமதிப்பற்ற வைரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, திருமலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் குறிப்பிட்டு, ஜெயின் தம்பதியினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், மன்னர்கள் காலம் தொட்டே ஏழுமலையானுக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜெயின் தம்பதியினரும் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துள்ளதாகப் பாராட்டினார். இதற்கிடையே, இன்னும் இரண்டு மாதங்களில் 17 கிலோ தங்கத்தால் பத்மாவதி தாயாருக்கு தங்கச் சேலை காணிக்கையாக வழங்கவும் ஜெயின் தம்பதியினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















