புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற அரசியலமைப்புச் சட்ட தின விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் தமிழக ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்கு 870 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக இதுவரை 24 சதவீத நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டங்களை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கப்படும் என்றார்.
மேலும், சென்னை எழும்பூர், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படுவதாகவும், மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறுவதை காங்கிரஸ் மற்றும் தவெக கட்சிகளால் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
















