கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரான பெண் ஆட்சியரிடம், நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வாக்குமூலப் பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பெறப்பட்டுள்ள ரகசிய வாக்குமூலம், விசாரணையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















