கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் - திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!
Nov 28, 2026, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 28, 2026, 09:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ள உச்சநீதிமன்றம், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள், தீர்ப்பை மீறியுள்ளதாக விமர்சித்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத மாநில அரசு மற்றும் அதிகாரிகளின் போக்கிற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை மென்மையாக கையாளுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், இது போன்ற தருணங்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறிவிட்டு மாநில அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை மனசாட்சியை உலுக்குவதாகக் குறிப்பிட்ட அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை நிராகரிப்பதாக கூறினர்.

மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாதது மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகவும், உத்தரவைச் செயல்படுத்தாமல் இருப்பது அரசமைப்பை சீர்குலைக்கும் முயற்சி என்றும் சாடினர்.

மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டதாகவும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்ப்பை மீறியுள்ளதாகவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது என்பதை நினைவுபடுத்திய அவர்கள், தங்களது உத்தரவு மாநில அரசு, அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வ மத நிறுவனங்கள் என அனைவரையும் கட்டுப்படுத்தும் எனத் தெளிவுபடுத்தினர்.

எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் நீதித்துறைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் சகித்துக்கொள்ள முடியாது என எச்சரித்த நீதிபதிகள், உத்தரவைச் செயல்படுத்தத் தவறியவர்கள் மீது எவ்வித அனுதாபமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தனர்.

மேலும், தீர்ப்புகள் மீறப்படும்போது அமைதியாக இருக்கவோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கி இருக்கவோ முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Tags: Thiruparankundram Deepam issuethiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issuesupreme courtThiruparankundramThiruparankundram issuethiruparankundram temple issue
Share
Tweet
SendShare
Previous Post

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

Related News

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் – திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies