உண்மையைத் தொடர்ந்து தேடும் முயற்சியே இந்துத்துவம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டெல்லியில் பிரம்மாண்ட ராஷ்ட்ர வந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சிறப்புரையாற்றினார். அப்போது உண்மையைத் தொடர்ந்து தேடும் முயற்சியே இந்துத்துவம் என குறிப்பிட்டார். வேறுபட்ட வழிபாட்டு முறைகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு வலுப்பெறுவதாகவும் தெரிவித்தார். தனிமனித சுதந்திரமும், சமூகப் பொறுப்பும் இணைந்ததே இந்தியப் பண்பாடு என்றும், உலகிற்கு வழங்கவும் இந்தியாவிடம் தனித்துவமான அறிவு உள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
















