மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியில் பெண்களை வலுவான பங்களிப்பாளர்களாக மாற்றும் இந்த வரலாற்று முன்னெடுப்பை ஆதரிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
பிரதிநிதித்துவத்தில் பெண்களுக்கு வலுவான பங்களிப்பை வழங்க அரசு உறுதியாக உள்ளதாகவும், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு கனவு இனி நனவாகப் போவதாகவும் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
















