உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
புதிய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் முன்னிலையில், தீபத்தூணில் கொப்பரை வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் 50 பேர் மட்டுமே பங்கேற்றனர். பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, அரோகரா முழக்கங்களுடன் தீபம் ஏற்றப்பட்டது.
















