சென்னை புதுப்பேட்டையில், மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், “ஜனநாயகத்தைக் காப்போம்… அராஜகத்தை அகற்றுவோம்” என்ற முழக்கத்துடன் தேசியக் கொடிப் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பாஜக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய ராம் மாதவ், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தமிழக மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை கிருஷ்ண பரமாத்மாவுடன் ஒப்பிட்டுப் பேசியதுடன், டெல்லியில் மோடி இருக்கும் வரை தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை எனத் தெரிவித்தார்.
















