உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் - சிறப்பு தொகுப்பு!
Oct 15, 2026, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 10:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான ஆஸ்திரேலியன்சூப்பர், இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (NIIF) மேலும் 32 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தோனேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு,ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வரவேற்று, முக்கியத் துறைகளின் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மெல்போர்ன் நகரில் அந்நாட்டு வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து, வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில் ஆஸ்திரேலிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியங்கள் தற்போது நான்கு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன என்றும், இந்தியாவில் ஓய்வூதிய சேமிப்புகள் ஒரு புனிதமான நம்பிக்கையாகக் கருதப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான, நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இந்தியா, ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியங்களுக்கு வழங்குகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியங்களின் நம்பிக்கையும் மூலதனமும் வளருவதை உறுதி செய்வதே நாட்டின் முயற்சியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான இந்நிறுவனத்தின் புதிய இந்திய முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான ஆஸ்திரேலியன் சூப்பர், இந்தியாவின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (NIIF) மேலும் 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் உறுதியளித்த 240 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீட்டிற்கு மேலதிகமாக இந்த முதலீடாக இது அமையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமான இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதலீட்டு அளவை 3.3 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக உயர்த்தியுள்ளது.

போக்குவரத்து, எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பிற முக்கிய சொத்துக்கள் உள்ளிட்ட துறைகளில் நீண்ட கால உலகளாவிய நிறுவன மூலதனத்தை ஈர்ப்பதற்காக, தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் 2015-ல் மத்திய அரசால் உருவாக்கப் பட்டது.

லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய ஓய்வூதிய சேமிப்பாளர்களின் சார்பாக சுமார் 410 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலியன் சூப்பர், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியமாகும்.

இந்த முதலீடு நாட்டின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பாதையின் மீதான உலகளாவிய நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

AustralianSuper-இன் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடர் அறிவித்த 500 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீட்டை இந்தியா வரவேற்பதாகவும் நாட்டின் துடிப்பான பொருளாதாரம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்கும் மகத்தான வாய்ப்புகளையும் இந்த முதலீடு பிரதிபலிப்பதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: bilateral cooperationprime minister modiAustralian Prime Minister Anthony AlbaneseAustralia's largest pension fundNational Investment and Infrastructure Fund
Share
Tweet
SendShare
Previous Post

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

Next Post

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

Related News

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies