5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Oct 15, 2026, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 06:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு உட்பட 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் அறிவிப்புகளை வெளியிட கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்கு நீதிமன்றத்தால் ஏற்று கொள்ளப்பட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடும் வரை, அதனை முறையான நிலுவை வழக்காக கருத முடியாது எனவும். அதனால் தற்காலிக காலி இடங்களை நிரப்புவதற்கு எந்தவொரு சட்ட தடையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுவில் குறிப்பிட்டுள்ள தொகுதிகளின் வாக்காளராக இல்லாத மனுதாரர், இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை எனவும், இடைத்தேர்தல் நடத்துவதா?, இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் முன்பு இடைத்தேர்தல் நடந்தால் அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு 2 மக்கள் பிரதிநிதிகள் தேர்வு என்ற அரசியல் சாசன பிரச்னை எழும் என குறிப்பிட்டனர்.

தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது என்ற வாதங்களை ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனு தொடர்பாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பினர்.அதுவரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

Tags: PerunduraiSTAY FOR BY ELECTIONrichy EastViralimaliTamil Nadukarurmadras high courtAmbasamudram
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

Next Post

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

Related News

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies