ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்
Oct 15, 2026, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 11, 2026, 08:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி, ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி 2025-ல் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆவணங்களுடன் ஆஜராகுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக பேசிய நீதிபதி, ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு பேசுகின்றனர்; ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

தங்களை தொட முடியாது என அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்; குற்றம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன எனவும், அடுத்த தேர்தலும் முடிந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்..

Tags: madras high courtDirectorate of Vigilance and Anti-Corruption.S.P. Velumani case
Share
Tweet
SendShare
Previous Post

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

Next Post

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

வங்கதேசத்தை போன்று கலவரத்தை தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சி – பாஜக குற்றச்சாட்டு!

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies