பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் திரைத்துறையில் 55 வருடங்கள் நிறைவு பெற்றதை AI புகைபடத்துடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகரான அமிதாப் பச்சன் திரைத்துறையில் 55 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.
பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் 1969 ஆம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். இவர் 1970 ஆம் ஆண்டு பாலிவுட் திரைத்துறையில் தடம் பதித்தார்.
இவர் திரைத்துறையில் தடம் பதித்து நேற்றோடு 55 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
T 4924 – 55 years in the wondrous world of Cinema .. and AI , gives me its interpretation ❤️ ..
a presentation by Ef B .. self made 🙏 pic.twitter.com/uQbyf8EjE8— Amitabh Bachchan (@SrBachchan) February 16, 2024
அந்த பதிவில் அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய தனது புகைப்படத்தை பகிர்ந்து, 55 வருடம் இந்த அதிசய உலகத்தின் விளக்கத்தை இந்த AI விளக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.