காஸாவில் இருந்து வரும் அகதிகளை தடுக்க, இராணுவ உதவியுடன் எல்லை பகுதியில் சுவர் அமைக்கும் பணியில் எகிப்து அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதை அடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதனால், உயிருக்கு பயந்து ஏராளமான பாலஸ்தீனியர்கள் தங்களது குடியிருப்புகளை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அந்த வகையில், எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமிகள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது. காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக இந்த சுவர் கட்டப்பட்டு வருகிறது.
காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜுவைத்- ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி, 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகிற செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளது.
இருந்தபோதிலும், இதுகுறித்து எகிப்து அரசாங்கம் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.