கோவையிலிருந்து சென்னை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்குப் படிப்படியாக விமானச் சேவை அதிகரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளதால், கொங்கு மண்டல தொழில் அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக, கோவை விமான நிலையத்தில் இருந்து அதிக அளவு விமானங்கள் இயக்கப்பட்டது. 2023-ல் 22 உள் நாட்டு விமானங்களும், 2 வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வந்தன. ஆண்டுக்கு 20 லட்சம் உள்நாட்டுப் பயணிகள், 2 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் பயன் பெற்றனர். தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே, கோவையிலிருந்து வெளிநாட்டுக்கு நேரடியாக விமானச் சேவை இல்லாததால், இங்கிருந்து டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று, அங்கிருந்து வெளிநாடு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. மேலும், கோவையில் இருந்து உள் நாட்டுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 27 -ஆக இருந்தது.
இதனால், வெளிநாடு செல்பவர்களுக்கு உதவும் வகையில், டெல்லி, மும்பைக்கு அதிக விமானங்களை இயக்க வேண்டும் எனத் தொழில் அதிபர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கோவையில் விமானச் சேவைகள் படிப்படியாக அதிகரிப்படும் என்று தகவல் வெளியானதால், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.