சென்னை சென்ரல் இரயில் நிலையம் அருகே இரயில் என்ஜின் தடம் புரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சென்ரல் அருகே பேசின் பிரிட்ஜ் இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையம் அருகே இரயில் என்ஜின் நிறுத்தும் இடம் மற்றும் பராமரிப்பு செய்யப்படும் பகுதி உள்ளிட்டவை அடங்கியுள்ளது.
இதனால், முக்கிய இரயில்களின் எஞ்ஜினின்கள் இந்த பகுதியை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பேசின் பிரிட்ஜ் அருகே வந்த ஒரு இரயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது. இதனால், அந்த பகுதியில் திடீரென பெரும் சத்தம் எழுந்தது. பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்குப் புறப்படும் இரயில்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரயில் பயணம் செய்யும் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இரயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சென்ரல் இரயில் நிலையத்தில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இரயில் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
தடம் புரண்ட இரயில் எஞ்ஜினை மீட்டும் பணியில் ஏராளமான இரயில்வே ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இரயில் எஞ்ஜின் மீட்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து, இரயில் பாதை சரி செய்யப்படும் என்றும் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.