12வது ஃபெயில் திரைப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படம், 12வது ஃபெயில். ஆரம்பத்தில் இந்தியில் வெளியான இத்திரைப்படம் அங்கு வரவேற்பினைப் பெற்றபின், தமிழில் டப் செய்து வெளியானது.
இந்தப் படத்தில் விக்ராந்த் மஸ்ஸியின் நடிப்பு பல நட்சத்திரங்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. கடந்த மாதத்தில் ஓடிடியில் ஹிந்தி மொழி மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதில் விக்ராந்த் மாஸி, மெத்தா சங்கர், சஞ்சய் பிஸ்னாய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் இப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
யுபிஎஸ்சி நுழைவுத் தேர்வை முயற்சிக்கும் மில்லியன் கணக்கான மாணவர்களின் போராட்டங்களை இந்தப் படம் காட்டுகிறது.
வறுமையைத் தாண்டி ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய மனோஜ் குமார் ஷர்மாவின் வாழ்க்கையை இது விவரிக்கிறது. அனுராக் பதக்கின் நாவலை அடிப்படையாகக் கொண்ட விக்ராந்த், காவல்துறையில் சேர விரும்பும் சம்பலைச் சேர்ந்த ஒரு சிறுவனாகக் காணப்படுகிறார்.