ஜெர்மனியின் முனிச் நகரில் பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை சந்தித்து பேசினார்.
ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டுள்ளனர். உலகில் காணப்படும் பாதுகாப்பு சவால்களை பற்றி உயர்மட்ட அளவிலான விவாதங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவ வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச பாதுகாப்பு மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்- மாலிக்குடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. காசா நகரில் உள்ள தற்போதைய சூழல் குறித்து நான் விவாதித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.