காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ‘இந்தியா’ என்ற செல்ஃபி பாயிண்ட் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ‘இந்தியா’ என்ற செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செல்பி பாயிண்ட் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஜீலம் நதியின் அழகிய காட்சிகளுடன் சேர்ந்து இந்த பாயிண்ட் கூடுதல் அழகை தருகிறது.
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த செல்பி பாயிண்ட் திறந்துவைக்கப்பட்டது. இதை செல்ஃபி பாயிண்ட் கலைஞரும் RNAF நிறுவனருமான ரூபிள் நாகி இந்த செல்பி பாய்ண்டை உருவாக்கினார்.
இந்த செல்பி பாயிண்ட் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பெயர் பெற்ற நாகியின் அறக்கட்டளைக்கு ராணுவம் நன்றி தெரிவித்தது.
மேலும் அந்த செல்பி பாயிண்டில் “ப்ரௌட் டு பீ இந்தியன்” என்று எழுதியுள்ளது. மூவர்ண நிறங்கள் கொண்டு ஹாஷ்டாக் இந்தியா என்று என்று இந்தியா வரைபடம் போட்டுள்ளது.