உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தென்கொரியாவில் உள்ள பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியுடன் விளையாடியது. இந்திய அணியின் மணிகா பத்ரா முதல் போட்டியில், தரவரிசையில் 90-வது இடம் வகிக்கும் டோரா மதராஸாவுடன் விளையாடினார்.
இதில் இந்திய வீராங்கனை 8-11, 11-5, 12-10, 8-11, 11-4 என்ற செட் கணக்கில் 3-2 என்ற புள்ளியில் அபார வெற்றி பெற்றார்.
இதேபோல் மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, ஹங்கேரி வீராங்கனை ஜார்ஜினா பொட்டாவுடன் விளையாடினார்.
இதில் இந்திய வீராங்கனை 11-5, 14-12, 13-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இந்தியாவை முன்னிலை பெற செய்தார்.
அதேபோல் இந்தியாவின் ஆயிஹிகா முகர்ஜி, 3-1 என்ற செட் கணக்கில் (7-11, 11-6, 11-7, 11-8) பெர்னாடெட் பாலின்ட்டை வீழ்த்தினார்.
எனினும், ஸ்ரீஜா அகுலா 2 தோல்விகளை சந்தித்துள்ளார். பொட்டா மற்றும் மதராஸ்சிடம் அவர் தோற்றார். இதனால், ஹங்கேரி அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
5 பேர் கொண்ட குழுவில் 3-வது இடம் பிடித்துள்ளது. அடுத்து, உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி நாளை விளையாட உள்ளது.