இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்தியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 17 வது ஐபிஎல் சீசன் நடைபெறவுள்ளது.
இதில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தாண்டு போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனுக்கான எதிர்பார்ப்பு கடந்த 2023 டிசம்பரில் ஏலம் நடத்தப்பட்டதில் இருந்தே அதிகரித்து வருகிறது.
ஐபில் 2024 சீசன் எப்போது தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மார்ச் முதல் மே மாதம் வரை தேதியை தேர்வு செய்யாமல் தவித்து வருகிறது.
வருகின்ற ஜூன் 1ம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 17வது சீசனை வரும் மார்ச் 22ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 27 வரை பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆண்கள் ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்த வருடம் தோனியின் கிரிக்கெட் பயணத்தின் கடைசி வருடம் என்றும் கூறிப்படுகிறது. அதேபோல் வீரர்களும் ஐபிஎல்-க்கான தங்களின் பயிற்சியை தொடங்கியுள்ளனர்