இங்கிலாந்தில் நடைபெற்ற BAFTA திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இயக்குநர் ஜொனாதன் கிளேசருக்கு விருது வழங்கினார் நடிகை தீபிகா படுகோனே.
பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone). பேட்மிட்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான தீபிகா, முதலில் ஒரு பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்து வந்தார்.
அதன் மூலம் 2006ஆம் ஆண்டு அவருக்கு ‘ஐஸ்வர்யா’ என்ற கன்னட திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு, இன்று உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் (பாஃப்டா) விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் சேலை அணிந்து சென்றார். சேலையில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. BAFTA விருதுகளில் ஆங்கிலம் அல்லாத பிரிவில் சிறந்த படத்திற்கான விருதை தீபிகா படுகோனே வென்றுள்ளார்
தற்போது இவர் BAFTA திரைப்பட விருது விழாவில், ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இயக்குநர் ஜொனாதன் கிளேசருக்கு விருது வழங்கினார்.