மணிப்பூரில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. சுராசந்த்பூர் பகுதியில், காலை 9.10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 32 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், சுரசாந்த்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் பகுதியில், இன்று காலை 6.36 மணிக்கு, 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.