இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில், நேற்றையப் போட்டியில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் தலா 45 புள்ளிகளை பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் போட்டிகள் பிப்ரவரி 21 ஆம் தேதியுடன் முடிவடைய போகிறது.
இந்நிலையில் நேற்று ஒரு போட்டி ஹரியானாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 45 போட்டிகளை பெற்று 45-45 என்ற கணக்கில் இந்த போட்டி டிராவில் முடிந்தது.