கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகளின் 4-வது பதிப்பின் இரண்டாம் பகுதி குல்மார்கில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் பகுதி பிப்ரவரி 2-6 முதல் லடாக்கில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இரண்டாவது பதிப்பு குல்மார்கில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன.
இதில் பனிச்சறுக்கு, ஆல்பைன் ஸ்கை , நோர்டிக் ஸ்கை, ஸ்கேட்டிங், ஹாக்கி மற்றும் ஸ்னோ மவுண்டேனிரிங் உள்ளிட்ட பல்வேறு குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் 2020 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் குளிர்காலங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இது மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜேகே ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மற்றும் குளிர்கால விளையாட்டு சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.