மூத்த வழ்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மறைவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X தளத்தில், இது தொடர்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். அதில், ஃபாலி எஸ் நாரிமன் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன்.
“ஃபாலி எஸ் நாரிமன் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். ஒரு தலைசிறந்த சட்ட வல்லுநர், புகழ்பெற்ற அரசியலமைப்பு நிபுணர் மற்றும் சட்ட நிபுணத்துவம் பெற்றவர்களில் அரிதானவராக விளங்கிய ஒருவர் காலமானது நமது தேசத்துக்கு மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், எண்ணற்ற… pic.twitter.com/VmiajZT6Ap
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 21, 2024
ஒரு தலைசிறந்த சட்ட வல்லுநர், புகழ்பெற்ற அரசியலமைப்பு நிபுணர் மற்றும் சட்ட நிபுணத்துவம் பெற்றவர்களில் அரிதானவராக விளங்கிய ஒருவர் காலமானது நமது தேசத்துக்கு மாபெரும் இழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், எண்ணற்ற அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.