சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் புகழ் பெற்ற கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது.
மிகவும் பழமையான இந்த கோட்டை கருப்பண்ண சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களாகத் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 21 -ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகமும், ஊர் மக்களும் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், யாக சாலை பூஜை நடைபெற்றது.
பிப்ரவரி 19 -ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜையும், அதேபோல, பிப்ரவரி 20 -ம் தேதி காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
பிப்ரவரி 21-ம் தேதி காலை 6 -ம் கால யாக சாலை பூஜை மற்றும் கோ பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.