மாடல் அழகி தானியா சிங் தற்கொலை வழகில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு தொடர்புள்ளது என போலீசார் சந்தேகம்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 28 வயதான மாடல் அழகி தானியா சிங் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார். கடந்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளாக பேஷன் டிசைனிங் மற்றும் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த தானியா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.
ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் தற்போது போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த முதற்கட்ட விசாரணையில் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவை விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
அபிஷேக் சர்மா இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் IPL தொடரில் சன் ரைஸஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
தானியா, அபிஷேக் சர்மாவுக்கு அவரின் போனில் இருந்து மெசேஜ் அனுப்பியுள்ளார், ஆனால் அபிஷேக் சர்மா அதற்க்கு எந்த வித பதில் செய்தியும் அனுப்பவில்லை. அதேபோல் தானியா சிங்கின் மொபைல் அழைப்பு எண்ணில் அபிஷேக் சர்மாவின் எண் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஐபிஎல் வீரர் அபிஷேக் சர்மாவின் பெயர் இந்த வழக்கில் வந்துள்ளதால் இந்த வழக்கு தற்போது பரப்பாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எஸ்.ஆர்.எச் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா அந்த அணிக்காக 426 ரன்களை எடுத்தார்.
இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 11 போட்டிகளில் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.