கேபிள் டி.வி. விவகாரத்தில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மெர்லியன்று தாஸ். இவர் செய்தியாளர்களுக்குப் பரபரப்புப் பேட்டியளித்துள்ளார்.
அதில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜின் மகன் ரெமோன், பால்வளத்துறையில் தேவையில்லாமல் தலையீடு செய்வதாகவும், இதனால், மாவட்டத்தில் பால்வளத்துறையில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், ரெமோன் தனது கேபிள் நிறுவனம் மூலம் கொடுத்த நெருக்கடி காரணமாக, 15,000 பேர் அரசு கேபிள் டிவியில் இருந்து, விலகி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, அமைச்சர் மனோ தங்கராஜின் மகன் ரெமோன் அனைத்துத் துறை நிர்வாகத்திலும் தேவையில்லாமல் தலையிடுகிறார். இது தொடர்பாக, ஆதாரத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம் எனக் கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.