அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் , நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது தான் நியூராலிங்க் நிறுவனம்.
நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதனின் மூளையில் “சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. ல் தற்போது அதை பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார் எலான் மஸ்க்.
அதாவது, பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு, மூளையில் சிப் பொருத்தி ஆய்வு மேற்கொண்ட நிலையில், மூளையில் சிப் பொருத்தப்பட்ட அந்த நபர், தற்போது குணமடைந்து வருகிறார் என்றும், கம்ப்யூட்டர் மௌஸை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேறி உள்ளது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
நமது மூளை உடலைக் கட்டுப்படுத்த சமிக்ஞைகளைப் பயன்படுத்துவதைப் போலவே, நியூராலிங்கின் மூளைச் சிப் நமது எண்ணங்களுக்கும் கம்யூடருக்கும் இடையே ஒரு பாலம் போல் செயல்படுகிறது.
நியூராலின்ஸ் நிறுவனம், மூளைக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒரு இன்டர்பிரைஸ் இணைப்பை உருவாக்கி, அதன் மூலம் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில், மனிதரின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தியுள்ள நிலையில், அவர் தனது எண்ணங்கள் மூலம் கணிணி மவுஸை கட்டுப்படுத்தினார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.