தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே விடுதலையாக ஒப்புக்கொண்டவர் தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்று காந்தியடிகளால் புகழப்பட்ட தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை அவர்களது பிறந்த தினம் இன்று.
தனது பதினாறு வயதிலேயே, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்பட்டதை எதிர்த்து, காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
தனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்று காந்தியடிகளால் புகழப்பட்ட தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை அவர்களது பிறந்த தினம் இன்று.
தனது பதினாறு வயதிலேயே, தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்பட்டதை எதிர்த்து, காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகப்… pic.twitter.com/YjOGaCLgHz
— K.Annamalai (@annamalai_k) February 22, 2024
சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே விடுதலையாக ஒப்புக்கொண்டவர். சமத்துவத்திற்காக போராடிய, பாரதத்தின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தியாக வரலாற்றை போற்றி வணங்குகிறோம்.